/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்த துாய்மை பணியாளரிடம் விசாரணை
/
போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்த துாய்மை பணியாளரிடம் விசாரணை
போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்த துாய்மை பணியாளரிடம் விசாரணை
போலி ஆவணம் மூலம் பணியில் சேர்ந்த துாய்மை பணியாளரிடம் விசாரணை
ADDED : டிச 02, 2025 02:20 AM
சேலம், போலி ஆவணம் தயாரித்து, துாய்மை பணியில் சேர்ந்த பெண்ணிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனியை சேர்ந்தவர் பழனிசாமி, 50. இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியிடம், நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சி, 5வது வார்டு அம்மாபேட்டையை சேர்ந்த பாரதி என்பவர், போலியாக ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளிடம் கொடுத்து, 2021ல் மாநகராட்சியில் துாய்மை பணியாளராக சேர்ந்தார். இவர் பணிக்கு செல்லாமல், தினமும் வீட்டில் இருந்தபடியே சம்பளம் பெற்று வருகிறார். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இதே போல மாநகராட்சியில் சில வார்டுகளில் முறைகேடு நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாரதி என்ற பெண் துாய்மை பணியில் சேர்ந்துள்ளாரா என்பது குறித்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் முரளி சங்கர் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட துாய்மை பணியாளர் பாரதியிடம், பணியில் சேர்ந்த வாரிசு சான்றிதழை சரி பார்க வேண்டும் என்பதால், அதை தருமாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர், இதுவரை ஆவணங்களை கொடுக்காமல் விடுமுறையில்
இருந்து வருகிறார்.
இது குறித்து பாரதி கூறுகையில், போலி ஆவணங்கள் வழங்கவில்லை. நான் வேலைக்கு செல்வது கிடையாது என்றார். வேலைக்கு செல்லாமல், மாநகராட்சியில் சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறீர்களா' என, கேட்டதற்கு, இது குறித்து கணவரிடம் கேட்க சொன்னார்.

