தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள்

தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள்

தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள்


ADDED : ஜூலை 07, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சொத்து தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு, ஆயுள் தண்-டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்-ளது.

சங்ககிரி அருகில் உள்ள, வெள்ளையம்பாளையம் வெடிச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் சின்னபழனி. இவரது மகன் சுப்பிரமணி, 55. சின்னபழனியின் மூத்த மகன் துரைசாமி ஏற்கனவே இறந்து-விட்டார். பாகப்பிரிவினைக்கு பின், தனது பாகத்தை இறந்து போன துரைசாமியின் மகன் செல்வம் மீது, சின்னபழனி எழுதி வைத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2019 ஜூன் 8 ல், ஏற்பட்ட தகராறில், சுப்பிர-மணி தனது தந்தை சின்னபழனியை மண்வெட்-டியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகா-யமடைந்த சின்னபழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியை கைது செய்தனர். இவ்வ-ழக்கு சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி-மன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us