/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் அறிவுரை
/
வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் அறிவுரை
வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் அறிவுரை
வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி அமைச்சர் அறிவுரை
ADDED : நவ 15, 2025 01:50 AM
இடைப்பாடி: ''அரசு திட்டங்களை பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்ப-டுத்தி வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
சேலம் மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியருக்கு, 'விலையில்லா சைக்கிள்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன், மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கி பேசிய-தாவது: சேலம் மாவட்டத்தில், 2021 - 22ம் கல்வியாண்டு முதல், 4 ஆண்டுகளில் சைக்கிள் வழங்கும் திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிய-ருக்கு, 1,00,181 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில், 178 பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், 25,159 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்-பட உள்ளது. வேம்படிதாளம் அரசு பள்ளியில், 84 மாணவர்கள், 77 மாணவிகள் என, 161 பேருக்கு சைக்கிள் வழங்கி, இத்-திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்துக்கு உட்-பட்ட அனைத்து அரசு, அதன் உதவி பெறும் மேல்நிலை பள்ளிக-ளுக்கும் இந்த கல்வியாண்டில் சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய, இதுபோன்ற பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வேளாண், தோட்டக்கலைத்துறை சார்பில், 15 பயனா-ளிகளுக்கு, 1.88 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், 16 கழிவு சேகரிப்பு வாகனங்களை, அமைச்சர் வழங்கினார். எம்.பி.,க்கள் செல்வகண-பதி, சிவலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்-வரி, வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

