/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதான அன்புமணி ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.எல்.ஏ., ஆறுதல்
/
கைதான அன்புமணி ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.எல்.ஏ., ஆறுதல்
கைதான அன்புமணி ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.எல்.ஏ., ஆறுதல்
கைதான அன்புமணி ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று எம்.எல்.ஏ., ஆறுதல்
ADDED : நவ 15, 2025 01:52 AM
ஆத்துார்: ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதலில் கைதான, 8 பேரின் வீடுகளுக்கு சென்று, மேட்டூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்-வாகிகள், ஆறுதல் கூறினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், வடுகத்தம்பட்-டியில், கடந்த, 4ல், பா.ம.க.,வின், ராமதாஸ் - அன்புமணி ஆதர-வாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ராமதாஸ் அணியின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் உள்-ளிட்ட நிர்வாகிகளின் காரை சேதப்படுத்தியது தொடர்பாக, ஏத்-தாப்பூரில் அளித்த புகாரில், அன்புமணி அணியின் மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் உள்பட, 20 பேர் மீது வழக்குப்பதியப்பட்-டது.இந்த வழக்கில், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளான, ஆத்துார் வடக்கு ஒன்றிய துணை செயலர் வெங்கடேசன், 37, உறுப்பினர்க-ளான சின்னகிருஷ்ணாபுரம் பூவிழி ராஜா, 33, விமல்ராஜ், 22, தமிழ்செல்வன், 29, வடுகத்தம்பட்டி விக்னேஷ், 25, வாழப்பாடி சரவணன், 30, வைத்தியகவுண்டன்புதுார் அருள்மணி, 32, புது கொத்தாம்பாடி இளங்கோ, 30, ஆகியோரை, கடந்த, 5ல் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அந்த, 8 பேரின் வீடுகளுக்கும், அன்புமணி அணி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்று, அவர்களது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தனர். அப்போது சதாசிவம், 'சிறைக்கு சென்ற-வர்களை வெளியே கொண்டு வருவதற்கான பணியில், அன்பு-மணி ஈடுபட்டுள்ளார். இதற்கான செலவுகளை, அவரே ஏற்றுக்-கொண்டுள்ளார். உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம்' என கூறினார்.

