குடும்ப பிரச்னையில் தாக்குதலுக்குள்ளான தாய் பலி; கொலை வழக்கில் மகன் கைது
குடும்ப பிரச்னையில் தாக்குதலுக்குள்ளான தாய் பலி; கொலை வழக்கில் மகன் கைது
ADDED : ஜூலை 07, 2026 06:35 AM
ஆத்துார்; குடும்ப பிரச்னையில் தாக்குதலுக்குள்ளான தாய் பலியானதால், கொலை வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல் அருகே, சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி சிவகாமி, 65. இவரது மகன் பூமாலை, 40, கடந்த ஜூன், 21ல், மாலை, 6:00 மணியளவில் துணி துவைக்கும் கல் புதிதாக வைப்பது தொடர்பாக, சிவகாமி, மருமகள் தமிழ-ரசிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த மகன் பூமாலை, தாய் சிவகாமியை தென்னை மட்டையால் அடித்து கீழே தள்ளிவிட்-டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகாமி, ஆத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். பின், மேல்சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர். கடந்த ஜூன் 27ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். நேற்று, அவர்
உயிரிழந்தார்.
மகள் கலைச்செல்வி புகாரில், கெங்கவல்லி போலீசார்,
பூமாலை மீது, கொலை வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். ஆத்துார் உட்-கோட்ட நெடுஞ்சாலைத்துறையில், பூமாலை ஆய்வாளராக பணிபுரிந்து
வருகிறார்.
