sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நஞ்சுண்டேஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில்கள் தேரோட்டம் கோலாகலம்

/

நஞ்சுண்டேஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில்கள் தேரோட்டம் கோலாகலம்

நஞ்சுண்டேஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில்கள் தேரோட்டம் கோலாகலம்

நஞ்சுண்டேஸ்வரர், சென்னகேசவ பெருமாள் கோவில்கள் தேரோட்டம் கோலாகலம்


ADDED : மே 11, 2025 01:23 AM

Google News

ADDED : மே 11, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர், சங்ககிரி மலை மீதுள்ள சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலின் சித்திரை தேர் திருவிழா, கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் தேவகிரி அம்மன், நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு, முத்து ரத பவனியில் அம்மன், நஞ்சுண்டேஸ்வரர், இடைப்பாடி நகரை வலம் வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திருவிழா ஆலோசனை குழுவினர், கோவில் செயல் அலுவலர் மாதேஸ்வரன், கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு, தாவாந்தெரு, வெள்ளாண்டிவலசு ஆகிய ஊர்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை இழுக்கும் கட்டளைதாரர்களான, போயர் மகாஜனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் என திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மொத்தம் உள்ள, 3 தேர்களில் முதல் தேரில் விநாயகர், இரண்டாவது தேரில் தேவகிரி அம்மனுடன் நஞ்சுண்டேஸ்வரர், 3வது தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் வலம் வந்தனர். 4 நாட்கள் நடக்கும் இத்தேரோட்டம், வரும் 13ல் முடிகிறது.

அதேபோல் சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று சுவாமி, சங்ககிரி மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளினார். இதையடுத்து சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்து பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.

இந்நிலையில் சென்ன

கேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை, சேலம் எம்.பி., செல்வகணபதி, வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பட்டக்காரர் ராஜவேல், ஊர் கவுண்டர் சுந்தரேசன், சுவாமி பாதம் தாங்கும் குழுவினர், தி.மு.க.,வின் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலர் சுந்தரம், நகர செயலர் முருகன், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். வரும், 18ல் பெருமாள் சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம், 20ல் சங்ககிரி திருமலைக்கு திரும்புதல் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us