ADDED : ஆக 04, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு; ஏற்காடு, மாரமங்கலம் மலை கிராமத்தை சேர்ந்-தவர் மாதையன், 60. இவர் நேற்று காலை, 10:30 மணிக்கு தனது வீட்டிலிருந்து, தோட்ட வேலை செய்ய சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காட்டெருமை, மாதை-யனை முட்டியது.
இந்த தாக்குதலில் நெஞ்சு, இடது கை எலும்பு முறிந்தது. மேலும் கொம்பு வயிற்று பகுதியில் குத்தியதில், குடல் வெளியே கிடந்தது. மாதையனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு வாழவந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்-சைக்காக அயோத்தியாப்பட்டினம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார்.ஏற்காடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
