/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகராட்சியுடன் சேர்க்க ஊராட்சி விபரம் வழங்க உத்தரவு
/
சேலம் மாநகராட்சியுடன் சேர்க்க ஊராட்சி விபரம் வழங்க உத்தரவு
சேலம் மாநகராட்சியுடன் சேர்க்க ஊராட்சி விபரம் வழங்க உத்தரவு
சேலம் மாநகராட்சியுடன் சேர்க்க ஊராட்சி விபரம் வழங்க உத்தரவு
ADDED : மார் 18, 2024 04:07 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அதில், 9 ஊராட்சிகளை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க, அதன் விபரங்களை வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், சமீபத்தில், பனமரத்துப்பட்டி பி.டி.ஓ.,(கி. ஊ.,), ஊராட்சி தலைவர்களுக்கு அனுப்பிய குறிப்பாணை:
நகர்புற உள்ளாட்சிகள் அருகே உள்ள ஊராட்சிகளை, மாநகராட்சிகளுடன், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, அமானிகொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்க, செயற்குறிப்பிணை முழு வடிவில் வழங்க வேண்டும். ஊராட்சி தீர்மானம், மக்கள் தொகை, வருவாய், ஊராட்சி வரைபடம், ஊராட்சியின், 3 ஆண்டின் வரவு, செலவு தணிக்கை அறிக்கை ஆகியவற்றை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும், 28க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

