/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
/
பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலம்
ADDED : டிச 02, 2025 02:20 AM
சேலம், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
சேலம், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. கும்பாபி ேஷகம் செய்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்து திருப்பணிகள் துவங்கின. கடந்த நவ.,19ல், யாகசாலை முகூர்த்த கம்பம் நடப்பட்டது. 23ல் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டத
27ல் பசுமாடு, குதிரையுடன் நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 28 முதல் பூஜைகள் துவங்கி, நேற்று காலை ஆறு கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.காலை 9:00 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து, புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து, மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து, 9:30 மணிக்கு கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபி ேஷகத்தை நடத்தி வைத்தனர். அப்போது, கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் முழங்க அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் சீதளா தேவி என்ற பலப்பட்டரை மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், புனிதநீரால் அபி ேஷகம் செய்து தீபாராதனை காட்டப்
பட்டது.
மதியம், 12:00 மணிக்கு 'தச' தரிசனம் மற்றும் 'தச' தானம் ஆகியவற்றுவடன் உச்சிகால பூஜை நடத்தி, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வான வேடிக்கை தாரை தப்பட்டை முழங்க, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

