தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெண்கல மணி திருட முயற்சி பூசாரிக்கு மக்கள் 'கவனிப்பு'

வெண்கல மணி திருட முயற்சி பூசாரிக்கு மக்கள் 'கவனிப்பு'

வெண்கல மணி திருட முயற்சி பூசாரிக்கு மக்கள் 'கவனிப்பு'


ADDED : ஜூலை 06, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, சூரியமலை அடிவாரம் அருகே வெற்றிலைக்காரன்காட்டில் உள்ள பெருமாள் கோவிலில், 5 கிலோவில் பழமையான வெண்கல மணி உள்ளது. அந்த மணியை, நேற்று அதிகாலை, 3 பேர் திருடினர். அந்த வழியே வந்த மக்கள் பார்த்து கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, திருடர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், 2 பேர் பைக்கில் தப்-பிவிட, ஒருவரை சுற்றிவளைத்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து மக்கள், பின் தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்-தனர். தொடர்ந்து

அவர்களிடம், திருடனை

ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், மருக்-கம்பட்டியில் உள்ள ஸ்ரீமுருகன் கோவில் பூசாரி வெங்கடாசலம் என தெரிந்தது. அவர் காயம் அடைந்திருந்ததால், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us