ADDED : ஜூலை 07, 2026 06:29 AM
சேலம்;சேலம் சூரமங்கலம், 2வது கேட் பகுதியில் உள்ள ராவுத்தர் பெட்ரோல் பங்கிற்கு, அதே பகுதியை சேர்ந்த தரகர் சுந்தரேசன், 62, என்பவர் 2025 மார்ச், 11ல் தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப
சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு தெரிந்த லட்சுமி நாரா-யணன், லெவின்குமார், மீராஹூசைன் மற்றும் பிரசாத் ஆகியோர் அணுகி, பெட்ரோல் பங்கிற்கு பங்குதாரர்களாக சேர்பதாக கூறி, முதலீடு செய்தால் அதற்கான வட்டியும், லாபத்தில் ஒரு பங்கும் தருவதாக கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய சுந்தரசேன், முதலில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு வட்டியும், லாபத்தில் பங்கும் கொடுத்-துள்ளனர். இந்த நிலையில் நான்கு பேரும் மீண்டும் சுந்தரேசனிடம், பெட்ரோல் பங்குகளை குத்தகைக்கு எடுப்பதாக கூறியுள்ளனர். இதை நம்பிய சுந்தரேசன் மேலும் ரூ.12 லட்சம் கொடுத்-துள்ளார்.
இதன் பின்னர் அவர்கள் கூறிய படி வட்டியும் தர-வில்லை, பங்கும் தரவில்லை, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; மேலும் அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேந்திரன், சேலம் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நெடுங்-குன்றம், சாய்பாபா நகரை சேர்ந்த லட்சுமி நாரா-யணன், 54, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி
வருகின்றனர்.
