/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதர்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
மதர்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மதர்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மதர்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 31, 2025 02:50 AM
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி எல்.ஆர்.என்., காலனியில் உள்ள மதர்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்பு-ணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
அதன் சேர்மன் ரவிக்குமார் தலைமை வகித்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: சாலை விபத்துக்களால் உயிரி-ழப்புகள் அதிகம் நடக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில் விழிப்-புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சாலையில் செல்லும்-போது விபத்து ஏற்படாமல் இருக்க, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதிவேகமாக செல்வோர், விபத்தில் சிக்கி உயிரிழக்-கின்றனர். இதை உணர்ந்து சீரான வேகத்தில்
வாகனங்களை இயக்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் தலையில் காயம் ஏற்பட்டு, பாதிப்பு அதிகமாவதோடு, வாழ்நாள் முழுதும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லையெனில் விபத்தின்போது கண்ணாடி, ஸ்டியரிங்கில் அடிபட்டு நெஞ்சு பகுதியில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பால், வாழ்நாள் முழுதும் நம்மை யார் பார்த்துக்கொள்வர்?
பணம் இருப்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள். சராசரியான நபர்-களை யார் காப்பாற்ற முடியும். போதையில் வாகனம் ஓட்டு-வதை தவிர்க்க வேண்டும். சாலையில் குறிக்கப்பட்டு இருக்கும் விதிகளை முழுதும் தெரிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். மேலும் மருத்துவமனையில் மூட்டு மாற்று, முதுகெ-லும்பு, கை, கால் மற்றும் கணுக்கால், எலும்பியல், இடுப்பு அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி அல்லது கீஹோல், குழந்தை எலும்பியல் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழி-யர்கள் பங்கேற்றனர்.

