/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் எனக்கூறி ரூ.5 கோடி மோசடி; போலீஸ் கமிஷனரிடம் புகார்

ADDED : டிச 09, 2025 10:10 AM

சேலம்: நிலத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறி, பெங்களூரு ஊழியர்க-ளிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது, நடவடிக்கை எடுக்க சேலம் போலீஸ் கமிஷன-ரிடம் புகார் அளித்தனர்.
பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழி-யர்கள் மஞ்சுநாத் சுவாமி,45; சாதிக் அலிகான்,39, சர்வேஸ்,42, ெஷரின் பானு,26, வசி-முல்லாஹ்,38, சைத்ரா,26, ஆசியா,23, நவாஸ் ெஷரிப்,34, பிரதான்,20, முகமது ரபி,36, ஆகியோர் நேற்று சேலம் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு விபரம்:
சேலத்தை சேர்ந்த சந்திரசேகர்,42, எங்களுடன் பழகி நண்பராக மாறினார். அவர், சேலம் அழகா-புரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் நீலகண்டன் என்பவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.முதலீடு செய்ய பணம் இல்லை என்ற போது, உங்களது, 'பே சிலிப்' களை கொடுங்கள், வங்-கியில் கடன் வாங்கி
முதலீடு செய்து கிடைக்கும் பணத்தை கடனை கட்டி விடலாம் என கூறி அனைவரது பெயரிலும் பல வங்கிகளில், 5 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இரண்டு மாதங்கள் வங்கி கடனுக்கு தவணை கட்-டிய நிலையில், தற்போது தலைமறைவாகி விட்டார். நாங்கள் கடனுக்கு வட்டி கட்ட முடி-யாமல் தவித்து வருகிறோம். மோசடி செய்த சந்-திரேசேகர், நீலகண்டன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.