/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முறைகேடாக பட்டா மாற்றம் செய்த தாசில்தார்; வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை கோரி சீர் தட்டுடன் மனு
/
முறைகேடாக பட்டா மாற்றம் செய்த தாசில்தார்; வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை கோரி சீர் தட்டுடன் மனு
முறைகேடாக பட்டா மாற்றம் செய்த தாசில்தார்; வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை கோரி சீர் தட்டுடன் மனு
முறைகேடாக பட்டா மாற்றம் செய்த தாசில்தார்; வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை கோரி சீர் தட்டுடன் மனு
ADDED : டிச 09, 2025 10:13 AM

சேலம்: தன் கணவரின் பூர்வீக சொத்தை, வாரிசான தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யாமல் முறை-கேடாக மற்றவர்களுக்கு பெயர் மாற்றம் செய்த தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் கலெக்டரிடம் மனு கொடுக்க, 101 ரூபாய் காணிக்கை மற்றும் சீர் தட்-டுடன் பெண் ஒருவர் வந்தார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வெள்ளாளப்பட்டி, ஆத்துமேடு பகுதியை சேர்ந்த குமார் மனைவி மோகனா.43. இவர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தாம்-பால தட்டில் தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, வெற்றிலை பாக்கில், 101 ரூபாய் காணிக்கையுடன் கூடிய சீர் தட்டுடன் மனு அளிக்க வந்தார்.
இதுகுறித்து மோகனா கூறியதாவது:
என் கணவர் குமார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவரின் பூர்வீக சொத்தை வாரிசு என்ற உரிமையில் என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, வெள்ளாளப்பட்டி வி.ஏ.ஓ மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் துணை தாசில்தார் ஆகியோரிடம் ஓராண்டுக்கு முன் விண்ணப்பம் செய்திருந்தேன்.
இதுவரை பெயர் மாற்றம் செய்யாமல் அலைக்க-ழித்து வருவதோடு, கணவரின் பூர்வீக விவசாய நிலம் தொடர்பாக, ஆத்துார் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ள போது, வாரிசுதார-ரான என் பெயர் மற்றும் பிள்ளைகள் பெயரை மறைத்து விட்டு வேறு நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதுகுறித்து இருவரிடமும் கேட்ட போது, உங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய பணம் செல-வாகும் என லஞ்சம் கேட்கின்றனர். சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பெயர் மாற்றம் செய்யலாம் என கேட்ட போது தகாத வார்த்தைகளால் திட்டு-கிறார். சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேங்காய் பழ சீர் தட்டுடன் மனு கொடுக்க வந்தேன்.இவ்வாறு கூறினார். அப்பெண்ணிடம் விசாரித்த போலீசார், பின்னர் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

