/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜவுளி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் நுாதன மோசடி
/
ஜவுளி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் நுாதன மோசடி
ADDED : நவ 15, 2025 01:50 AM
சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, காந்தி நகரை சேர்ந்தவர் நாக-ராஜன். அதே பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். ஆன்லைன் மூலமும் வியாபாரம் செய்கிறார்.
கடந்த பிப்ரவ-ரியில், ஆன்லைன் மூலம் அவரை தொடர்பு கொண்ட இருவர், 'கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள். ஜவுளி ரகங்களை ஆன்-லைனில் பார்த்தோம்' என கூறி, ஆர்டர் செய்து புடவை, சுடிதார் வாங்கினர். தொடர்ந்து, 'கூகுள்பே' மூலம் பணம் அனுப்பி-விட்டு, அதற்கான அறிக்கையை, 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நாகராஜ-னுக்கு அனுப்பி, ஜவுளிகளை வாங்கி வந்தனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன், ஜவுளி ரகங்களை வாங்கிக்-கொண்டு, 8,160 ரூபாய்க்கு, 'ஸ்கிரீன் ஷாட்'டை நாகராஜனுக்கு அனுப்பினர். அப்போது, 1 ரூபாய் மட்டும் வரவு என வந்தது. அதிர்ச்சி அடைந்த நாகராஜ், சந்தேகப்பட்டு கணக்குகளை சரி-பார்த்தபோது அவர்கள் வாங்கும் ஜவுளி ரகங்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ரூபாய் அனுப்பியதாக கணக்கில் காட்டியது.
அவர்கள் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் அனைத்தையும் சோதனை செய்தபோது, ஒரு ரூபாய் மட்டும் அனுப்பிவிட்டு ஸ்கிரின் ஷாட்டை எடிட் செய்து அனுப்பியது தெரிந்தது. இதுவரை அவர்கள், 8 லட்சம் ரூபாயை, அப்படி ஏமாற்றியதும் தெரிந்தது. அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார்-படி, நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

