ADDED : ஆக 29, 2026 01:47 AM
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுாரில், 'அட்மா' திட்டத்தில், 'ஒருங்கிணைந்த பண்ணையம்' தலைப்பில் உள் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார்.
பயிற்சியாளராக, தர்மபுரி மாவட்டம் மரபு வழி பண்ணை ஆசி-ரியர் சஞ்சீவ பெருமாள், ஒருங்கிணைந்த பண்ணைய நோக்கம் மற்றும் முக்கியத்துவம், முக்கிய கூறுகளான பயிர் சாகுபடி, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு, கால்நடை, கோழி, தேனீ, மீன் வளர்ப்பு பற்றியும் பயிற்சி வழங்கினார்.மண் பரிசோதனை, மண்வள அட்டை, இயற்கை விவசாயம், உரங்களின் சமச்சீரான பயன்பாடு மற்றும் நீர் சேமிப்பு நுட்-பங்கள், பசுந்தாள் உரம் இடுதல் மற்றும் விவசாய அடையாள எண் குறித்தும் தெரிவித்தார்.
மேலும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, இன கவர்ச்சி பொறி, மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை விவசாய முறை-களில் பஞ்சகவ்யம் தயாரித்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
