தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பத்மவாணி மகளிர் கலை கல்லுாரியில் முதலாண்டு மாணவியர் வரவேற்பு விழா

பத்மவாணி மகளிர் கலை கல்லுாரியில் முதலாண்டு மாணவியர் வரவேற்பு விழா

பத்மவாணி மகளிர் கலை கல்லுாரியில் முதலாண்டு மாணவியர் வரவேற்பு விழா


ADDED : ஜூலை 03, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம், கருப்பூர் சுங்கச்சாவடி அருகே உள்ள, பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2026 - 27ம் கல்வி ஆண்டு, இளங்கலை, முதுகலை முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி இயக்குனர் இசை-வாணி சத்தியமூர்த்தி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ் வரவேற்றார்.

பத்மவாணி மகளிர் கல்வி நிறுவன செயலர் துரைசாமி, தாளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர், மாணவியருக்கு வழிகாட்டு-தல்களை வழங்கினர். பத்மவாணி மகளிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் முத்துக்குமார், செயல் அலுவலர் ரமேஷ், கே.எஸ்.மகளிர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், பேராசிரியர் ரமணி ராஜகோபால், வாழ்த்துரை வழங்கினர்.லைப் ஸ்கில் டிரெய்னர் சி.இ.ஓ., கார்த்திக்வேலு, முதலாம் ஆண்டு மாணவியருக்கு ஆக்கப்பூர்வ தகவல்கள், வாழ்வின் முக்-கியத்துவம், பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். இதில் மாணவியரின் பெற்றோரும் பங்கேற்றனர்.

மேலும் மேல்நிலைப்பள்ளியில், 500க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, 15.88 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கான ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாணவியருக்கு, பத்மவாணி மகளிர் கல்வி நிறு-வன அறக்கட்டளை சார்பில், கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்-டது. பெற்றோரை இழந்த மாணவியருக்கு, இலவச கல்வி வழங்-குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us