/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நோயாளியிடம் பணம் கேட்டால் புகார் தரலாம்
/
நோயாளியிடம் பணம் கேட்டால் புகார் தரலாம்
ADDED : டிச 07, 2025 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரசு மருத்துவ மனைக்கு சேலம் மட்டுமன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து, தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். தவிர ஏராள-மானோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
அங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு, துய்மை பணியில் ஈடுபட்-டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவ-மனை பணியாளர்கள் பணம் கேட்பதாக புகார் எழுந்தது. இதனால், நோயாளிகள், உறவினர்கள், 72001 - 18256 என்ற 'வாட்ஸ் அப்' மூலம் புகார் அளிக்கலாம் என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

