/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'நீட்' தேர்வு மூலம் கிராமப்புற மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கை
/
'நீட்' தேர்வு மூலம் கிராமப்புற மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கை
'நீட்' தேர்வு மூலம் கிராமப்புற மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கை
'நீட்' தேர்வு மூலம் கிராமப்புற மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கை
ADDED : ஆக 26, 2024 05:30 AM

திருப்புத்துார்:
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ஆத்தங்கரைப்பட்டி அரசு பள்ளி மாணவி 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.
திருப்புத்துார் அருகே ஆத்தங்கரைப்பட்டி முத்தையா - சுதாவின் மகள் லட்சுமி 20. இவர் தி.புதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 421 மதிப்பெண் பெற்றார். திருப்புத்துார் என்.எம்., மகளிர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 509 மதிப்பெண் பெற்றார். இவரது குடும்பத்தாரின் ஆசை டாக்டராகவே இருந்தது.
அதை நிறைவேற்றும் விதமாக முதல் முறை நீட் தேர்வு எழுதியதில், 354 மதிப்பெண் எடுத்தார். இதன் மூலம் மருத்துவ சேர்க்கைக்கு சீட் கிடைக்கவில்லை.
இரண்டாவது முறையாக 'நீட்' தேர்வினை எழுதி 555 மதிப்பெண் எடுத்து, எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்குரிய கட் ஆப் மதிப்பெண் 506 க்கு மேல் பெற்றார். தமிழக அரசின் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு படி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை கிடைத்தது.
இது குறித்து மாணவி லட்சுமி கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்., படிப்பது என் கனவு. பெற்றோர் ஆதரவுடன் அந்த கனவை அடைந்துவிட்டேன். இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.

