ADDED : ஜூலை 06, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, ஜூலை 7
மல்லாகோட்டை கிராமத்தில் சந்திவீரன் சுவாமி ஆனி மாத எருதுக்கட்டு திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 29 ஜோடி , சிறிய மாடு பிரிவில் 57 ஜோடி , பூஞ்சிட்டு மாடு பிரிவில் 46 ஜோடி என மொத்தம் 132 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழாக்குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
