/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் பணி போலீசாருக்கு அளவு சாப்பாடு வெயிலில் காயும் போலீசார் புலம்பல்

ADDED : மார் 22, 2024 04:46 AM

சிவகங்கை: தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 300 கிராம் பச்சரிசி தயிர் சாதம், ஊறுகாய் எந்த வயிற்றுக்கு போதும்...என போலீசார் புலம்புகின்றனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று 2 வது நாளாக நடந்தது. நேற்று வரை ஒருவர் கூட வேட்பு மனுவை கலெக்டர் ஆஷா அஜித்திடம் தாக்கல் செய்யவில்லை.
இது வரை 14 பேர் மட்டுமே வேட்பு மனுவை வாங்கி சென்றுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாக ஆர்ச், மற்றும் நுழைவு வாயில், கலெக்டர் அலுவலக வாயில்களில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என 91 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வரும் நிலையில் தினமும் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு மதிய உணவு வழங்கவில்லை. இது போலீசார் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மதியம் போலீசாருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது.
அதில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட 300 கிராம் பச்சரிசி தயிர் சாதமும், சிறு துண்டு எலுமிச்சை ஊறுகாய் மட்டுமே இருந்தது.
இந்த தயிர் சாதத்தை சாப்பிடும் போலீசாருக்கு தண்ணீர் பாட்டில் கூட வினியோகம் செய்யவில்லை.