/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எலுமிச்சம்பழம் விலை கடும் உயர்வு
/
எலுமிச்சம்பழம் விலை கடும் உயர்வு
ADDED : ஏப் 27, 2024 04:35 AM

திருப்புவனம்: கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருப்புவனத்தில் எலுமிச்சை விலையும் உயர்ந்து வருகிது.
பொதுமக்கள் சர்பத், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவற்றை அதிகம் விரும்பி அருந்துகின்றனர். வருஷநாடு, புளியங்குடி மற்றும் ஆந்திராவில் இருந்து அதிகளவு எலுமிச்சை விற்பனைக்கு வருவது வழக்கம், போதிய மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் விளைச்சல் குறைந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சம்பழம் 140 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக உயர்ந்துவிட்டது. சில்லறை விற்பனையில் ஒரு பழத்தின் விலை எட்டு ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

