/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இன்று பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா
/
இன்று பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா
ADDED : ஏப் 28, 2024 06:27 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. நாளை வசந்தப் பெருவிழா துவங்குகிறது.
திருப்புத்துார் நகரின் தென்திசை காவல் தெய்வமாக பூமாயி அம்மன் எழுந்தருளியுள்ளார். மூலவர் சப்தமாதர்களின் நடுநாயகமாக உள்ள வைஷ்ணவிதேவியே பூமாயி அம்மனாக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறார்.
இன்று காலை 7:00 மணிக்கு பூச்சொரிதல் விழா துவங்குகிறது.
பாலாபிேஷகம் முடிந்து புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். தொடர்ந்து பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபடுவர். நாளை அதிகாலை 4:00 மணிக்கு மேல் மூலவர் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறும்.
நாளை மாலை 6:30 மணிக்கு காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கும். தினசரி இரவு அம்பாள் கோயில் திருக்குளம் வலம் வருதல் நடைபெறும்.
மே3ல் பால்குடமும், மே 5ல் பொங்கல் விழாவும், மே 7ல் அம்மன் ரத ஊர்வலமும், மே 8ல் காலை தீர்த்தவாரி, இரவில் தெப்பத்திருவிழா நடைபெறும். ஏற்பாட்டினை வசந்தப்பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.

