/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் மாயம் : போலீசார் விசாரணை
/
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் மாயம் : போலீசார் விசாரணை
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் மாயம் : போலீசார் விசாரணை
அரசு குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் மாயம் : போலீசார் விசாரணை
ADDED : டிச 09, 2025 03:37 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 3 சிறுமிகள் தப்பி ஓடியதாக வார்டன் புகார் கொடுத்துள்ளார்.
சிவகங்கை வள்ளிச்சந்திரா நகரில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு வார்டனாக பாக்கியலட்சுமி 34 பணிபுரிகிறார். இவருடன் நேற்று முன்தினம் இரவு பணியில் செளந்தர்யா மற்றும் இரவு காவலர் ராஜம் பணியில் இருந்தனர். இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பள்ளியில் படிக்கின்றனர்.
காப்பகத்தில் 56 சிறுமிகள் தங்கியிருக்கின்றனர். தேவகோட்டை 14 வயது சிறுமி, மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, காளையார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆகியோர் காதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை போலீசார் மீட்டு பாதுகாப்பு மற்றும் குடும்ப நல ஆலோசனைக்காக இக்காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு கழிப்பறையில் உள்ள ஜன்னலை பயன்படுத்தி அவர்கள் வெளியே சென்றுவிட்டதாக வார்டன் பாக்கியலட்சுமி சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் விசாரிக்கிறார்.