/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியில் 4 ஆயிரத்து 719 நாய்கள்
/
காரைக்குடி மாநகராட்சியில் 4 ஆயிரத்து 719 நாய்கள்
காரைக்குடி மாநகராட்சியில் 4 ஆயிரத்து 719 நாய்கள்
காரைக்குடி மாநகராட்சியில் 4 ஆயிரத்து 719 நாய்கள்
ADDED : நவ 14, 2025 04:24 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியக்குடியில் சமூக நாய்கள் கருத்தடை மையம் திறப்பு விழா நடந்தது.
காரைக்குடி மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியக்குடியில் பயன்பாடின்றி கிடந்த பழைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு சமூக நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மேயர் முத்துத்துரை, மாங்குடி எம்.எல்.ஏ., மையத்தை திறந்து வைத்தனர்.
கமிஷனர் சங்கரன் தலைமையேற்றார். நிகழ்ச்சியில், மாநகர் நல அலுவலர் வினோத், மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநகர் நல அலுவலர் வினோத் கூறுகையில்: கால்நடை பராமரிப்புத்துறை காரைக்குடி மாநகராட்சி சார்பில் சமூக நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாட்டு செய்திட கருத்தடை மையம் தொடங்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை பின் கவனிப்பு, உணவளித்தல், மருந்துகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
காரைக்குடி மாநகராட்சியில் சமூக நாய்கள் கணக்கெடுப்பு நடத்தி 4 ஆயிரத்து 719 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்து 160 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது.

