/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் இளைஞர் முன்பகையால் கொலை 8 பேர் கைது
/
திருப்புத்துாரில் இளைஞர் முன்பகையால் கொலை 8 பேர் கைது
திருப்புத்துாரில் இளைஞர் முன்பகையால் கொலை 8 பேர் கைது
திருப்புத்துாரில் இளைஞர் முன்பகையால் கொலை 8 பேர் கைது
ADDED : பிப் 03, 2025 05:28 AM
திருப்புத்தூர்: திருப்புத்துாரில் முன்பகையால் இளைஞர் சண்முகத்தை 27, வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 8 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்புத்துார் மின்நகர் மாணிக்கம் மகன் சண்முகம் 27. இவருக்கும், சீதளி வடகரை வீரபத்திரன் மகன் ராஜேஷ் (எ) பூமிநாதன் 25, இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்பகையில், ஜன., 31 அன்று இரவு சமாதானம் பேசுவதற்காக சண்முகத்தை, அரசு மருத்துவமனை பின்பக்கம் அழைத்து, அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்தனர். இக்கும்பலை பிடிக்க டி.எஸ்.பி., செல்வக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர்.
இக்கொலை தொடர்பாக ராஜேஷ் (எ) பூமிநாதன் 25, காந்திநகர் பத்மசீனிவாசன் 24, பிரபாகர் காலனி சீனிவாசன் 27, காமராஜர் காலனி சரவணன் 18, ஜெ.ஜெ.,நகர் கார்த்திகேயன் 20, உதயா 18, மதுரை ரோடு வசந்த் 20,கே.வைரவன் பட்டி திருமலை 17 ஆகிய 8 பேர்களை கைது செய்து, அரிவாள், கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

