/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலியான கிராமம்; சர்ச் விழாவிற்காக மீண்டும் கூடியது
/
காலியான கிராமம்; சர்ச் விழாவிற்காக மீண்டும் கூடியது
காலியான கிராமம்; சர்ச் விழாவிற்காக மீண்டும் கூடியது
காலியான கிராமம்; சர்ச் விழாவிற்காக மீண்டும் கூடியது
ADDED : டிச 07, 2025 05:24 AM

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குமிழன்தாவு கிராமத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில், அங்கிருந்து வெளியேறிய கிறிஸ்துவர்கள், ஆண்டுக்கு ஒருநாள் நடக்கும் புனித சவேரியார் சர்ச் திருவிழாவிற்காக நேற்று ஊருக்கு வந்தனர்.
குமிழன்தாவு கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், 40க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தினர் வசித்து வந்தனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததாலும், போதிய வேலை இல்லாததாலும், அங்கிருந்தவர்கள் ஊரை காலி செய்து, பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
சில ஆண்டுகளாக இக்கிராமத்தில் ஒருவர் கூட வசிக்கவில்லை. வீடுகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. ஆனால் ஆண்டுக்கு ஒருநாள் நடக்கும் புனித சவேரியார் சர்ச் விழாவிற்கு மட்டும் வருவர்.
இந்தாண்டு டிச., முதல் சனிக்கிழமையான நேற்று நடந்த விழாவிற்காக, வெளியிடங்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்தனர். புனித சவேரியார் சொரூபம் தாங்கிய சப்பரத்தை, அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

