மின்கம்பி அறுந்து விழுந்து வாழை, கரும்பு பயிர்கள் கருகின
மின்கம்பி அறுந்து விழுந்து வாழை, கரும்பு பயிர்கள் கருகின
UPDATED : ஜூலை 08, 2026 04:21 PM
ADDED : ஜூலை 08, 2026 03:52 PM

அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை அருகே பதினெட்டாங்கோட்டையில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் வாழை, கரும்பு, தென்னை பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள நிலங்களில் விவசாயிகள் மா, தென்னை, வாழை, பலா, எலுமிச்சை பயிரிட்டுள்ளனர். இப்பகுதி வயல்களுக்கு மேல் மின்கம்பிகள் தாழ்வாக சென்றது. இந்த மின்கம்பிகளை சீர்செய்து தருமாறு பல முறை புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுக்கு மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், விவசாயி சோமசுந்தரம் நிலத்தில் வளர்ந்திருந்த தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தீப்பற்றி எறிந்தது. இதில் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. மானாமதுரை போலீசில் விவசாயி சோமசுந்தரம் புகார் அளித்தார்.
///
