/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் புறக்கணிப்பு: பஸ்கள் நிற்காததால் போராட மக்கள் முடிவு
/
பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் புறக்கணிப்பு: பஸ்கள் நிற்காததால் போராட மக்கள் முடிவு
பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் புறக்கணிப்பு: பஸ்கள் நிற்காததால் போராட மக்கள் முடிவு
பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் புறக்கணிப்பு: பஸ்கள் நிற்காததால் போராட மக்கள் முடிவு
ADDED : நவ 12, 2025 11:50 PM

மானாமதுரை: மானாமதுரையில் பைபாஸ் பஸ் ஸ்டாப் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையாகவும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் செயல்பட்டு வந்த பைபாஸ் பஸ் ஸ்டாப்பை மானாமதுரை கீழ்கரை பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தினர்.
மதுரை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து மானாமதுரைக்கு வரும் பயணிகள் இந்த ஸ்டாப்பில் இறங்கி அண்ணாதுரை சிலை வழியாக கீழ்கரை பகுதிக்கு சுலபமாக சென்று வந்தனர். கடந்த சில வருடங்களாக சர்வீஸ் ரோட்டிற்கு அருகே அமைக்கப்பட்ட மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் இவ்வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கும் சவாரி கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி பாலன் கூறியதாவது: மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பை நம்பி 30க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் இரு மார்க்கத்திலும் செல்லும் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதோடு மட்டுமில்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் போது மட்டும் 2 அல்லது 3நாட்கள் மட்டுமே பஸ்கள் நிறுத்தப்படுகிறது.பிறகு வழக்கம் போல் தொடர்ந்து பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். நிரந்தரமாக மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்த கோரி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

