/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு வங்கி ஓய்வூதியர் பணபலன் இழுத்தடிப்பு; டிசம்பரில் 2 ம் கட்ட விசாரணை

ADDED : டிச 02, 2025 05:05 AM
சிவகங்கை: சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர், ஊழியர் பணப்பலன் திரும்ப வழங்காதது குறித்து 2 ம் கட்ட விசாரணையை டிச., 2 வது வாரத்தில் கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் முத்துக்குமாரசுவாமி மேற்கொள்ள உள்ளார்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் உள்ள கிளை வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர், ஊழியர்களின் பணபலன் ரூ.6.33 கோடி வரை வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக ஓய்வூதியர்கள் கூட்டுறவு பதிவாளருக்கு புகார் அளித்தனர்.
அதே போன்று ஓய்வூதியர் பணத்தில் இருந்து மற்றவர்களின் பெயரில் உள்ள கடன் தொகையை ரூ.48 லட்சம் வரை பிடித்தம் செய்ததாக புகார் எழுந்தது. இவ்விரு புகார் குறித்தும் நவ., 28 ம் தேதி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் முத்துக்குமார சுவாமி விசாரணையில் ஈடுபட்டார்.
விசாரணையின் போது, ஓய்வூதியர் பணபலன்கள் ரூ.6.33 கோடியில் ரூ.4 கோடி வரை திரும்ப செலுத்தி விட்டதாக வங்கி சார்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்னும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், டிச., 2 வாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையை கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் மேற்கொள்வார்.
இந்த விசாரணைக்கு பின்னரே இடைக்கால அறிக்கை தயார் செய்து கூட்டுறவு துறை செயலர், பதிவாளரிடம் வழங்குவார் என தெரிவிக்கின்றனர்.