/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் சேதமான அதலை கண்மாய் பாலம் போக்குவரத்து பாதிப்பு
/
காரைக்குடியில் சேதமான அதலை கண்மாய் பாலம் போக்குவரத்து பாதிப்பு
காரைக்குடியில் சேதமான அதலை கண்மாய் பாலம் போக்குவரத்து பாதிப்பு
காரைக்குடியில் சேதமான அதலை கண்மாய் பாலம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 03, 2025 05:30 AM

காரைக்குடி: காரைக்குடி அதலைக் கண்மாய் தரைப்பாலம் சேதமடைந்து 4 மாதமாகியும் சரி செய்யப் படாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அதலை கண்மாய் உள்ளது. இக்கண்மாயின் அருகே வரத்து கால்வாயில், போக்குவரத்துக்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாய் வழியாக தேனாறு, சின்ன குன்றக்குடி கண்மாய், கோனேரி கண்மாய், அதலைக் கண்மாய் தண்ணீர் காரைக்குடி கண்மாயை சென்றடையும். இந்த முக்கிய வரத்து கால்வாயில் உள்ள சிமென்ட் பாலம் சேதமானதால், இந்த ரோட்டில் போக்குவரத்தை துண்டித்து விட்டனர்.
இப்பாலம் சேதமுற்று 4 மாதங்களுக்கு மேலாகியும் புதுப்பிக்கவில்லை. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் வ.உ.சி., ரோடு வழியாக செல்வதில் கனரக வாகனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.