ADDED : டிச 02, 2025 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மகேஷ்வரன், அன்பரசு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கொங்கையா, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துராமலிங்க பூபதி, ஆறுமுகம், கருப்புச்சாமி, இணைச் செயலாளர் மனோகரன் கோரிக்கையை விளக்கி பேசினர்.
2006ம் ஆண்டின் ஐநா சிறப்பு மாநாட்டு பிரகடனம் மற்றும் இந்திய நாட்டின் ஊனமுற்றோர்கள் உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

