/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமூக வலைதளத்தில் தவறான பிரசாரம்; சிவகங்கை எஸ்.பி., எச்சரிக்கை
/
சமூக வலைதளத்தில் தவறான பிரசாரம்; சிவகங்கை எஸ்.பி., எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் தவறான பிரசாரம்; சிவகங்கை எஸ்.பி., எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் தவறான பிரசாரம்; சிவகங்கை எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : மார் 17, 2024 11:50 PM
சிவகங்கை : சமூக வலைதளங்களில் தவறான அரசியல் விமர்சன வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அலைபேசிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் பழைய வீடியோக்களை போடுவார்கள். அவற்றை விசாரிக்காமல், மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது. மேலும் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் தேவையற்ற அரசியல் கட்சி விமர்சனங்கள் வந்தால், அவற்றை உறுதி செய்யாமல், மற்றவர்களுக்கு பகிர்வது தவறு. தேர்தல் சமயத்தில் சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரமோ, பிற கட்சிகளை விமர்சனம் செய்வது தவறு. அப்படி செய்வோர் குறித்து கண்டறிய போலீசில் தனியாக குழு அமைத்துள்ளோம்.
இது போன்று சமூக வலைதளங்களில் தேவையின்றி அரசியல் விமர்சனம் சார்ந்த வீடியோ வெளியிடுவோர் குறித்து போலீஸ் அலைபேசி எண் 83002 46525 க்கு தகவல் கொடுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவை உண்மையான வீடியோவாக இருந்தால், அது குறித்தும் சம்பந்தப்பட்ட நபர்களின் அலைபேசிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.