sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியில் புனரமைப்பு

/

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியில் புனரமைப்பு

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியில் புனரமைப்பு

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியில் புனரமைப்பு


ADDED : டிச 02, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியில் நடந்து வந்த நவீன மயமாக்கும் திட்ட பணிகள் முடிந்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 1.50 லட்சம் மக்கள் தொகையுடன் செயல்படுகிறது. இங்குள்ள பள்ளி, பல்கலை, பொறியியல் கல்லுாரிகளுக்கு படிப்பிற்காகவும், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் வேலைக்காக ஏராளமானவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருகின்றனர்.

ராமேஸ்வரம் - சென்னை, காரைக்குடி - மன்னார்குடி, பெங்களூரு, வடமாநில ரயில்கள் என 32 ரயில்கள் காரைக்குடி ஸ்டேஷனை கடந்து செல்கின்றன.

நாள் ஒன்றுக்கு காரைக்குடியில் இருந்து 1,485 பயணிகள் சென்று வருகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.4.80 கோடி வரை வருவாய் பெற்று வருகிறது.

அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடி செட்டிநாடு பாரம்பரிய நகரமாக இருப்பதாலும், மாநகராட்சி அந்தஸ்திற்கு நகரம் வளர்ந்துள்ளதால், காரைக்குடி ரயில்வே சந்திப்பு ஸ்டேஷனை தரம் உயர்த்தும் நோக்கில் மத்திய ரயில்வே அமைச்சரகம் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.13.57 கோடியை 2023ம் ஆண்டு ஒதுக்கியது.

இந்நிதியின் மூலம் காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நகரும் (எஸ்கலேட்டர்) படிக்கட்டு, 3 இடங்களில் லிப்ட் வசதி, டூவீலர், கார்கள் நிறுத்துவதற்கான ஸ்டாண்ட், செட்டிநாடு பாரம்பரிய கட்டடக்கலையை தத்ரூபமாக கொண்டு வரும் வகையில் சுவரோவிய கலைகளை செதுக்கியுள்ளனர். நுழைவு வாயில், பயணிகள் அமர கூடுதல் இடம், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை குறிப்பிட டிஜிடல் போர்டு, சி.சி.டி.வி., கேமராக்கள், பயணிகள் தங்குவதற்கென ஏ.சி., காத்திருப்போர் அறை மற்றும் மேம்படுத்தப்பட்ட டிக்கெட் கவுன்டர்கள், மேம்படுத்தப்பட்ட நடை மேம்பாலம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் வைத்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ.30 கட்டணத்தில் ஏ.சி., அறை

அம்ரூத் 2.0 திட்டத்தில் ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் நவீன வசதியுடன் கூடிய ஏ.சி., ஓய்வு அறை பணிகள் முடிந்து, அதில் சோபா அமைத்து பயணிகள் ஓய்வெடுக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இது ரயிலில் வரும் பயணிகள் சற்று இளைப்பாற ஆறுதல் அளிக்கிறது.








      Dinamalar
      Follow us