/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் l ↓அறுவடைக்கு இயந்திரங்கள் செல்ல முடியவில்லை
/
இளையான்குடியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் l ↓அறுவடைக்கு இயந்திரங்கள் செல்ல முடியவில்லை
இளையான்குடியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் l ↓அறுவடைக்கு இயந்திரங்கள் செல்ல முடியவில்லை
இளையான்குடியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் l ↓அறுவடைக்கு இயந்திரங்கள் செல்ல முடியவில்லை
ADDED : டிச 09, 2025 06:07 AM

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலைக்கிராமம், சூராணம், முனைவென்றி, நெட்டூர் உள்ளிட்ட கிராமங்களிலும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், கட்டிக்குளம், பீசர்பட்டி னம், மிளகனுார் உள்ளிட்ட கிராமங்களிலும் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இலவச மின்சார மூலமும் வயல்களில் உள்ள கிணற்றின் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
பெரும்பாலான கிராமங் களில் வயல்களுக்குள் செல்லும் மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்த தோடு ஆங்காங்கே சாய்ந்து மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்குகிறது.
நவ.20ம் தேதி முனைவென்றி கிராம வயலில் நெல் நாற்றுக்களை சுமந்து சென்ற விவசாயி முனியசாமி 50, மின் கம்பி பட்டு பலியானார்.அதேபோன்று பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி மகன் சுப்பிரமணி 55, என்பவரும் வாகுடி கிரா மத்தில் விவசாய வேலைக்கு சென்ற போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி பட்டதில் பலி யானார்.
வயல்களில் மின்கம்பி தாழ்வாக தொங்குவது குறித்து விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஒரு மாதத்திற்குள் பரிதாபமாக 2 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் அறுவடை துவங்க உள்ள நிலையில் வயல் களுக்குள் கதிர் அறுக்கும் இயந்திரம் மற்றும் டிராக்டர்களை கொண்டு செல்ல வேண்டிய நிலையில் ஆங்காங்கே மின்கம்பி தாழ்வாக தொங்குவதால் இயந்திரங்களை இறக்க முடியுமா என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற் பட்டுள்ளது.
பலியான விவசாயிகள் உறவினர்கள் கூறியதாவது:
தினமும் விவசாய வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வந்த இருவரும் தாழ்வாக தொங்கிய மின்கம்பி பட்டதில் பலியாகி உள்ளனர். இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
அரசு சார்பில் வழங்க வேண்டிய நிவாரண தொகையும் இதுவரை வழங்காமல் உள்ளனர். ஆனால் மற்ற விபத்துகளில் சிக்கி பலியானவர் களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆகவே அரசு உடனடி யாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை வழங்கி கிராமப் பகுதிகளில் சேத மடைந்த மின் கம்பங் களையும், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளையும் சரி செய்ய வேண்டும் என்றனர்.
மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை ஊழியர்களைக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக சரி செய்து வருகிறோம். ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அறுவடை ஆரம்பிக்கும் முன்னர் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றனர்.

