திருப்புத்துார்: திருப்புத்துார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலாபிேஷக விழாவை முன்னிட்டு டிச.16ல் லட்சார்ச்சனை துவங்குகிறது.
கார்த்திகை துவங்கி சபரிமலைக்கு விரதம் துவங்கிய பக்தர்கள் இக்கோயிலில் தினசரி வழிபாடு நடத்தி வருகின்றனர். டிச.16 காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம், சாஸ்தா ேஹாமம் நடைபெறும். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.
தொடர்ந்து தினசரி காலையில் லட்சார்ச்சனை நடைபெறும்.
டிச.27 காலை 10:30 மணிக்கு மூலவருக்கும், உற்ஸவருக்கும் மண்டலாபிேஷகம் நடைபெறும். இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
ஜன.3ல் காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. ஜன.11ல் ஐயப்ப பக்தர்கள் கோயிலில் இருமுடி கட்டி மகரஜோதி தரிசன யாத்திரை துவங்குவர்.
ஏற்பாட்டினை பக்தர்கள், மகரஜோதி யாத்திரை குழு, மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றம், கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

