/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
/
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
ADDED : டிச 09, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் 18 வகையான பொருட் களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் சங்காபி ஷேகம் நடைபெற்றது.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், சாலைக் கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெற்றது.

