/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறிவியல் மாநில மாநாடுஅரசு பள்ளி மாணவர் சாதனை
/
அறிவியல் மாநில மாநாடுஅரசு பள்ளி மாணவர் சாதனை
ADDED : டிச 09, 2025 06:18 AM

சிவகங்கை: குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் சிவகங்கை மாவட்டம் மேலயான்பட்டி மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை மாநில அளவில் சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடந்தது.
சிவகங்கை மாவட்டம் மேலயான்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீதர், வீர கணபதி இளநிலை தமிழ் பிரிவிலும்,காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் ஜெயபாலன்,பாண்டி செல்வம் இளநிலை ஆங்கில பிரிவிலும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
அதில் மேலயான்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை மாநில அளவில் சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்ந் தெடுக்கப்பட்டு சான்றிதழ் கேடயங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் தலைமை யாசிரியர் பாராட்டினர்.

