
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி பள்ளி ஆண்டு விழா தாளாளர் கிறிஸ்டிராஜ் தலைமையில் நடந்தது.முதல்வர் ஜீவிதா முன்னிலை வகித்தார்.
விழாவில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து மாணவர்களின் சிலம்பம்,யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் போலீஸ் எஸ்.ஐ., கமலா நேரு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

