/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
/
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
ADDED : நவ 13, 2025 02:12 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே மினி பஸ்சில் படியில் நின்று பயணித்த பிளஸ் 2 மாணவர் வேன் மீது உரசியதில் பலியானார். மற்றொரு வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை அருகேயுள்ள ஏனாபுரத்தை சேர்ந்த நாகவேல் மகன் சந்தோஷ்குமார் 16. கோட்டை மகன் சூர்யா 18. சந்தோஷ் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
சூர்யா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் தினசரி ஏனாபுரத்தில் இருந்து பள்ளிக்கும் பணிக்கும் மினி பஸ்சில் சிவகங்கை வருவது வழக்கம்.
நேற்று காலை 7:40 மணிக்கு ஏனாபுரத்தில் இருந்து மினி பஸ்சில் சிவகங்கை வந்தனர். டிரைவர் அலெக்ஸ் ஓட்டினார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் சந்தோஷ், சூர்யா படிக்கட்டில் பயணம் செய்தனர்.
மேம்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற தனியார் பள்ளி வேனை பஸ் முந்தி செல்ல முயன்றது. பள்ளி வாகனத்தின் பின்புறம் மினி பஸ்சின் படிக்கட்டு பகுதி மோதியது.
இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சூர்யாவிற்கு இடது காலில் முறிவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

