/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இறகு பந்து போட்டி மாணவி முதலிடம்
/
இறகு பந்து போட்டி மாணவி முதலிடம்
ADDED : டிச 07, 2025 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி மாநில இறகு பந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மாநில அளவிலான, குடியரசு தின குழு விளையாட்டு போட்டி நடந்தது. 17 வயதுக்குட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ரம்யா ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சேதுராமன் நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ் பாராட்டினர்.

