/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
/
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
ADDED : டிச 02, 2025 05:09 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நேர பிரச்னையால் அரசு டவுன் பஸ்சை, தனியார் டவுன் பஸ் நகர் பகுதிக்குள் அதிவேகத்தில் விரட்டிச் சென்றதால் பொதுமக்களும், மாணவர்களும் அச்சத்தில் பயந்து ஓடினர்.
சிங்கம்புணரியில் இருந்து அரசினம்பட்டி, சூரக்குடி, முறையூர் வழியாக திருப்புத்துார் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று மாலை 4:15 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு கடைவீதியில் வந்தது. அப்போது சிங்கம்புணரியில் இருந்து திருப்புத்துாருக்கு நேர் வழியாக செல்லும் தனியார் டவுன் பஸ் ஹாரன் அடித்தவாறு அதிவேகமாக முன்னால் சென்ற டவுன் பஸ்சை விரட்டிச் சென்று கூட்டுறவு சொசைட்டி முன் வழிமறித்து நின்றது. ரோட்டில் வலதுபுறம் தனியார் பஸ் அதிவேகத்தில் ஏறி வருவதை பார்த்த, மாணவர்கள் அச்சத்தில் ஓடினர், பொதுமக்களும் பயந்து நின்றனர்.
தனியார் பஸ் கண்டக்டர் இறங்கி வந்து அரசு பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனியார் பஸ்சுக்கான நேரத்தில் அரசு பஸ் காத்திருந்து பயணிகளை ஏற்றிச்சென்றதாக புகார் கூறப்பட்டது. நேர பிரச்னையில் முரண் இருந்தால் டெப்போ அதிகாரிகளிடம் புகார் செய்து தீர்வு காண வேண்டும். இப்படி பொதுமக்களை மிரட்டும் விதத்தில் நெருக்கடியான போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் விரட்டிச்சென்று அச்சுறுத்தியதற்கு பொதுமக்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர்.

