ADDED : பிப் 10, 2025 04:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பாவாணர் பிறந்தநாள் விளக்கக் கூட்டத்தில் தமிழ் நாள்காட்டி வெளியிடப்பட்டது.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற அமைப்பாளர் ரத்தினம் தலைமை வகித்தார். தமிழ் வழிக் கல்வி இயக்கம் எழுகதிர் வரவேற்றார். த.மு,எ.சங்க செயலாளர் வைகைபிரபா முன்னிலை வகித்தார். இயக்க தலைவர் சின்னப்பத்தமிழர் மொழிப்போர் ஈகியர் நாள் குறித்து விளக்கினார். பேராசிரியர் கோச்சடை தமிழ் நாள்காட்டியின் அவசியம் குறித்தும்,வழக்கறிஞர் பாவெல் பாவாணர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு குறித்தும் பேசினார். தமிழ் நாள்காட்டியை பேராசிரியர் கோச்சடை வெளியிட்டார். சென்னை சட்ட கல்லூரி மாணவி வெண்பா, பொறியாளர் சுபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு வேணுகோபால்,ஆசிரியர் சந்தானகிருஷ்ணன்,தி.வி.க.பெ அப்துல்பரீத், வி.சி.க. மாநில பேச்சாளர் வீரபாண்டியன், த.மு.எ.ச. கோவிந்தராஜன் உள்ளிட்ட தமிழாசிரியர்கள் பங்கேற்றனர்.

