/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்
/
காரைக்குடி கம்பன் விழா மார்ச் 22ல் துவக்கம்
ADDED : மார் 17, 2024 11:52 PM
காரைக்குடி : காரைக்குடியில் கம்பன் விழா மார்ச் 22 முதல் 25 வரை நடைபெறும் என கம்பன் அறநிலை தலைவர் பெரியணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: -மார்ச் 22 அன்று மாலை 6:00 மணிக்கு கம்பன் அறநிலை புரவலர் ஏ.சி., முத்தையா முன்னிலையில் விழா துவங்குகிறது.
கோவிலுார் நாராயண ஞான தேசிக சுவாமிகள் உரையாற்றுகிறார். நீதிபதி ஆர்.சுவாமிநாதன் தலைமை வகிக்கிறார். பங்கு தந்தை ஜெகத் கஸ்பார்ராஜ், திருப்பூர் கிருஷ்ணன் பேசுகின்றனர். மார்ச் 23ல் வே.ஆனந்த கிருஷ்ணன், ஜெயராஜ் கருத்தரங்கில் பேசுகின்றனர்.
மார்ச் 24 ல் நடுவர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும். மார்ச் 25ல் நாட்டரசன்கோட்டை கம்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கம்பன் அறநிலைய பொருளாளர் சுப்பிரமணியன், அறங்காவலர் வள்ளியப்பன் உடனிருந்தனர்.

