/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி குடிநீர் இரண்டு நாள் நிறுத்தம்
/
காவிரி குடிநீர் இரண்டு நாள் நிறுத்தம்
ADDED : டிச 09, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் காவிரி கூட்டுகுடிநீர் சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்படும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சி முத்தரசநல்லுாரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக மின்சாரம் தடை செய்யப்படும். மேலும், குடிநீர் குழாய்களிலும் சீரமைப்பு பணி நடக்க உள்ளது.
இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச.,9, 10) காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.

