/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி தாலுகாவில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலி
/
இளையான்குடி தாலுகாவில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலி
இளையான்குடி தாலுகாவில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலி
இளையான்குடி தாலுகாவில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலி
ADDED : நவ 14, 2025 04:19 AM

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் உள்ள நிலையில் சீவலாதி, சாத்தனுார்,இளையான்குடி தெற்கு, சூராணம் கீழாயூர் வடக்கு, குமாரக்குறிச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளதால் மக்கள் மற்றும் மாணவர்கள் வருமானம், ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழும், தற்போது பயிர் காப்பீடு செய்வதற்காக அடங்கல் சான்றிதழும் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காங்., சிறுபான்மை பிரிவு நிர்வாகி அம்பலம் ராவுத்தர் நயினார் கூறியதாவது:
இளையான்குடி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பொறுப்பு வி.ஏ.ஓ.,வாக செயல்படுபவர்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களுக்கு வராததால் மாணவர்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் அடங்கல் சான்றிதழ் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

