/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் குப்பையில் கிடக்கும் வாகனங்கள்
/
சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் குப்பையில் கிடக்கும் வாகனங்கள்
சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் குப்பையில் கிடக்கும் வாகனங்கள்
சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் குப்பையில் கிடக்கும் வாகனங்கள்
ADDED : நவ 14, 2025 04:24 AM

சிவகங்கை: சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்டு குவிந்து கிடக்கும் வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், கேட்பாரற்று பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர போதையில் நபர்களால் ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள், திருட்டு மோசடிக்கு பயன்படுத்தும் வாகனங்கள், விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் போன்றவற்றை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு முடிந்தவுடன் நீதிமன்ற அனுமதியுடன் அந்த வாகனத்தை திருப்பி எடுத்துச்செல்லவேண்டும்.
ஆனால் செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை குற்றச்செயலில் ஈடுபட்டோர் யாரும் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை. இவ்வாறு பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொடிய விஷப் பாம்பு குடி கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து போலீசாரையும் அங்கு வரும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது.
எனவே நகர் போலீஸ் ஸ்டேஷனில் கேட்பாரின்றி கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

