/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஆசிரியர் வெட்டிக்கொலை 'கிரைண்டர் ஆப்' லீலையா
/
ஆசிரியர் வெட்டிக்கொலை 'கிரைண்டர் ஆப்' லீலையா
ADDED : நவ 30, 2025 01:38 AM

தென்காசி: சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் இரவில் கடத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கிரைண்டர் ஆப் பயன்படுத்தும் ஓரின சேர்க்கையாளர் கும்பல் இதனை செய்திருக்கலாமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரடிகுளம் சிலோன் காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் 43. திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியர். சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவில் குருவிகுளம், காமாட்சிபுரம் பகுதியில் அவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரித்தனர்.
திருமணமாகி மனைவியை பிரிந்தவர் என தெரிகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் ஆப் கும்பல் அவரை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

