ADDED : பிப் 28, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடைச் சேர்ந்த சதீஷ், 19, என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன், இன்ஸ்டகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவி வீட்டிற்கு சென்ற சதீஷ், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவி ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். பெற்றோர் புகாரில், ஒரத்தநாடு மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து சதீஷிடம் விசாரிக்கின்றனர்.

