/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தி.மு.க., 'மாஜி' எம்.பி., வீட்டில் கொள்ளை; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ADDED : டிச 07, 2025 05:16 AM

நாகை தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.பியும், தற்போது, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாகவும், தி.மு.க., விவசாய அணி மாநில செயலராக உள்ள விஜயனுக்கு சொந்தமான வீடு, தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சேகரன் நகரில் உள்ளது. இங்கு அவரது மனைவி ஜோதிமணி மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த, நவ., 28 இரவு ஜோதிமணி, மகளுடன் வெளியூர் சென்றநிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, 88 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
தமிழ்பல்கலைகழக போலீசார், ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில், கொள்ளையடித்தது தர்மபுரியை சேர்ந்த பாத்திமா ரசூல், 54, அவரது மகன்கள் சாதிக் பாஷா, 33, மொய்தீன், 37, அவரது மகள் ஆயிஷா பர்வீன், 30, ஷாஜகான், 26, என தெரிந்தது.
போலீசார், சென்னையில் நேற்று பாத்திமா ரசூல் உட்பட நான்கு பேரையும் கைது செய்து, 88 சவரன் நகையை மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள ஷாஜகானை தேடுகின்றனர்.